மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இலங்கையை வந்தடைந்த LAUGFS கப்பல்
3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) ஏற்றிவந்த கப்பலொன்று இன்று (12) இலங்கையை வந்தடைந்துள்ளதாக LAUGFS Gas நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அண்மைய எரிவாயு விநியோகத் தடைக்குப் பின்னர் மீண்டும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள எரிவாயு இறக்கப்பட்ட பின்னர், சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பி அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் ஊடாக சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
LAUGFS கப்பல்
இதன்படி, நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எரிவாயு தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள நிறுவனம், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கையிருப்பை உறுதிப்படுத்திய பின்னர் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், மேலதிக தகவல்களுக்கு 1345 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |