கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை! ராஜாங்கனை தேரர் மீது தாக்குதல்
அனுராதப்புரத்தில் இடம்பெற்றுவரும் கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கஸ்ஸப்ப தேரரருக்க ஆதரவான குழுவினர் சிலர் அவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜாங்கனை தேரர் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது போராட்டம் இடம்பெறும் பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை ஏற்பட்டு வருகிறது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பினர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கும், அங்கு சென்ற ராஜாங்கணை சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் கடும் மோதல் நிலை ஏற்பட்ட நிலையில் இதன்போது, ராஜாங்கனைய தேரர் தாக்கப்பட்டு, அவருடைய காவியுடை பறித்து வீசப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சில தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று, கஸ்ஸப்ப தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் களத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.








| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |