யாழில் உச்சம் தொடும் மரக்கறி - அத்தியாவசிய பொருள்களின் விலைகள்
யாழில் ஜனாதிபதி அநுர பதவியேற்பதற்கு முன் தேங்காய் ஒன்று 80 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தேங்காயின் விலை 120 ரூபா முதல் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மரக்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதன்படி ஒரு கிலோகிராம் தக்காளி 800 ரூபாவுக்கும், கரட் 700 ரூபாவுக்கும் எலுமிச்சை 1200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மரக்கறிகளின் விலை
அதேபோன்று, ஒரு கிலோகிராம் பயற்றங்காய் 500 ரூபாவுக்கும், மரவள்ளிக்கிழங்கு 250 ரூபாவுக்கும், உருளைக்கிழங்கு 240 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

தேங்காயின் விலையும் 120 ரூபா முதல் 220 ரூபா வரை அதிகரித்துள்ளது.
மரக்கறிகளின் விலைகளுக்கு மேலதிகமாக, ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
திருச்சி கிழக்கில் த்ரிஷாவை களமிறக்கும் முயற்சி! தமிழக முதலமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
அத்தியாவசிய பொருள்களின் விலை
இதன்படி, முன்னர் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மா தற்போது 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை 220 ரூபா முதல் 240 ரூபா வரை விற்பனை செய் யப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை தற்போது 260 ரூபா முதல் 300 ரூபா வரை அதிகரித்துள்ளது.
பொன்னி அரிசியின் விலை 320 ரூபாவிலிருந்து 360 ரூபா வரை உயர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |