சுயநலவாதத் துறவிகளால் அநுராதப்புரத்தில் இழிவு செய்யப்பட்ட பௌத்தத்தின் புனிதம்

Sonnalum Kuttram
By Dharu Nov 12, 2026 07:51 AM GMT
Report

அமைதி, கருணை மற்றும் அகிம்சை ஆகியவற்றை உலகுக்குப் போதித்த கௌதம புத்தரின் உன்னத தர்மம், இன்று இலங்கையில் ஒரு சில சுயநலவாதத் துறவிகளால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

உலக இன்பங்களையும், ஆசைகளையும், பற்றுக்களையும் துறந்ததன் புனித அடையாளமாகக் கருதப்படும் சீவரம் எனப்படும் காவி உடையின் மாண்பு, அதே காவி உடையை அணிந்தவர்களாலேயே இன்று வீதியில் இழுத்து எறியப்பட்டுள்ளது.

இலங்கையின் பௌத்த வரலாற்றிலும், பௌத்த மக்களின் ஆன்மீக வாழ்விலும் மிக உயர்வாகப் போற்றப்படும் அநுராதபுரம் ருவன்வெலிசாய புனித பூமியில் இன்று அரங்கேறியுள்ள வன்முறைச் சம்பவங்கள், இந்த மாயத்தோற்றத் துறவிகளின் உண்மை முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் பலங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான குழுவினரால் இந்தப் போராட்ட நாடகம் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டாலும், இவர்களின் நடவடிக்கைகளில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் போக்கே மேலோங்கியிருந்தது.

கண்டியில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட இக்குழுவினர், கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அந்த இடத்தில் இனவாத அரசியலை முன்னெடுக்கும் சில அரசியல் பிரமுகர்களும் இவர்களுடன் கைகோர்த்துக்கொண்டமை, இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள மறைமுக அரசியல் நிகழ்ச்சிநிரலைத் தெளிவாக உணர்த்தியது.

நீதிமன்றத் தடை உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொழும்பில் தமது போராட்டத்தைத் தொடர முடியாமல் போன இக்குழுவினர், தமது களத்தை விகாரமகாதேவி பூங்காவிற்கு மாற்றினர்.

அங்கேயும் பல சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்ட பின்னர், இறுதியில் அநுராதபுரத்தில் தஞ்சம் புகுந்தனர். பௌத்த மக்கள் செறிந்து வாழும் புனித பூமியான அநுராதபுரத்தைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் ஒரு நுட்பமான உள்நோக்கம் இருந்தது.

அநுராதபுர புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற போர்வையில், ருவன்வெலிசாய வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தையும், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் இவர்கள் முன்னெடுத்தனர்.

பௌத்த மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மத ரீதியான அனுதாபத்தைப் பெற்றுத் தமது சுயநல மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பதே இவர்களின் கணக்காக இருந்தது.

ஆனால், அமைதியையும் தியானத்தையும் மட்டுமே கண்ட அந்தப் புனித மண்ணில், இன்று பௌத்த குழுக்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான மற்றொரு குழுவினர் வருகை தந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

இந்த மோதலின் போது, கஸ்ஸப தேரர் தரப்பினரால் ராஜாங்கனை தேரர் கடுமையாகத் தாக்கப்பட்டு, அவரது காவி உடை களைந்தெறியப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

பௌத்த தர்மத்தின்படி, ஒரு துறவி காவி உடையை அணிவது என்பது அவர் கடுமையான துறவற ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டவர் என்பதையும், கோபம், குரோதம் ஆகியவற்றைத் துறந்தவர் என்பதையும் சமூகத்திற்கு உணர்த்தும் அடையாளமாகும்.

ஆனால், சக துறவியின் காவி உடையையே வன்முறையால் களைத்தெறியும் அளவுக்கு இவர்களின் ஆணவமும் வன்முறை வெறியும் வளர்ந்துள்ளது. அநுராதபுரம் போன்ற உலகப் புனித நகரத்தின் அமைதியையும் புனிதத்தன்மையையும் சீர்குலைத்து, பௌத்த மதத்தின் நற்பெயருக்கு இவர்கள் சர்வதேச அரங்கில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் முரணாக, காவி உடைக்குள் ஒளிந்து கொண்டு வன்முறையையும் இனவாதத்தையும் விதைக்கும் இத்தகைய குழுக்களின் உண்மை முகத்தை பௌத்த மக்களும் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை! ராஜாங்கனை தேரர் மீது தாக்குதல்

கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை! ராஜாங்கனை தேரர் மீது தாக்குதல்

கஸ்ஸப்ப தேரர் குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்

கஸ்ஸப்ப தேரர் குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி