யாழில் காரில் மனைவி பிள்ளைகளுடன் சென்ற நபர் கைது - வெளியான பின்னணி
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் செம்மணி பகுதியில் வாகனங்களை நிறுத்தி சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இருவர் போதையில் சாரத்தியம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண காவல்துறையினர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் இணைந்து வீதியில் பயணித்த பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகன சாரதிகள் 52 பேரிடம் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என்பது தொடர்பிலான சோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் கார் ஒன்றில் மனைவி பிள்ளைகளுடன் வந்திருந்த நபர் உள்ளிட்ட இருவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதியாகியுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
அதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பென்ஸ் காரை வழிமறித்து காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது காரினுள் ஹெரோயின் போதைப்பொருள், வாள் மற்றும் நக்கிள்ஸ் கிளிப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |