நாளை களனி - கம்பஹா பகுதிகளில் நீர்வெட்டு: வெளியான அறிவிப்பு
களனி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் நாளை (14-11-2026) 13 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
குறித்த அறிவிப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) வெளியிட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையம்
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர் விநியோகம் பாதிக்கப்படும் நகர சபைப் பகுதிகள்:
- பேலியகொட (Peliyagoda)
- வத்தளை – மாபோல (Wattala-Mabola)
- ஜா-எல (Ja-Ela)
- கட்டுநாயக்க – சீதுவ (Katunayake-Seeduwa)
நீர் விநியோகம் பாதிக்கப்படும் பிரதேச சபைப் பகுதிகள்:
- முழுமையாகப் பாதிக்கப்படும் பகுதிகள்: களனி (Kelaniya), வத்தளை (Wattala), பியகம (Biyagama), மஹர (Mahara), தொம்பே (Dompe) மற்றும் ஜா-எல (Ja-Ela) பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள்.
- பகுதியளவில் பாதிக்கப்படும் பகுதிகள்: கட்டான (Katana), மினுவாங்கொட (Minuwangoda) மற்றும் கம்பஹா (Gampaha) பிரதேச சபைகளுக்கு உட்பட்ட சில பகுதிகள்.

இந்தநிலையில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் இரவு 10.00 மணியளவில் நீர் விநியோகம் மீண்டும் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கூட்டியே போதுமான தண்ணீரைச் சேமித்து வைத்து மின் தடை ஏற்படும் நேரத்தில் அதனை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேசிய நீர் சேமிப்பு வங்கி (NWSDB) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |