மாணவர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கொப்பிகள், நூல்களுக்கான வரி நீக்கம்
கல்வியின் முக்கியத்துவத்தையும் அத்தியாவசிய கல்விசார் பொருட்கள் சாதரண விலைகளில் கிடைப்பதற்குமான தேவையினையும் அங்கீகரிக்கும் வகையில் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் நாடாளுமன்றில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுர குமார இதனைத் தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு
2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்களும் ஏனைய அச்சிடப்பட்ட பொருட்களும் பெறுமதிசேர்க்கப்பட்ட வரிக்கு உட்படுத்தப்பட்டதுடன் அப்பியாசக் கொப்பிகள் முன்னர் இருந்தே பெறுமதிசேர்க்கப்பட்ட வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

கல்வி, அறிவு மற்றும் வாசிப்பு என்பவற்றுக்கான அனுசரணையை ஊக்குவிக்கும் வகையில் பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், பிள்ளைகளுக்கான பட மற்றும் சித்திரம் வரைதல் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள் மற்றும் வேறு அச்சிடப்பட்ட நூல்கள், அப்பியாசக் கொப்பிகள் என்பவற்றை பெறுமதிசேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்குவதற்கு நாம் முன்மொழிகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |