வவுனியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்!
Vavuniya
Sri Lanka
Arrest
By Shalini Balachandran
வவுனியாவில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வெளிவட்ட வீதியில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 12320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்