அமெரிக்காவின் அதிபராக எலன் மஸ்க் - 2023 கணிப்புக்களில் வெளிவந்த உண்மைகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருங்கியவரான முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், இந்த வாரம் ஒரு புதிய பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அடுத்த ஆண்டு ஜெர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போர் மற்றும் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் எனவும் அது எலன் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக வழிவகுக்கலாம் என்றும் கணித்துள்ளார்.
தற்போது, புடினின் ஆலோசனை பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவராக மெட்வடேவ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டிற்கான கணிப்பு
இதற்கு முன்னர் புடின் பிரதமராக பதவி வகித்த நான்கு ஆண்டு கால ஆட்சியின் போது ரஷ்ய அதிபராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தனிப்பட்ட டெலிகிராம் மற்றும் டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளின் பட்டியலில், பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதையும் அவர் முன்னறிவித்தார்.
மேலும் அவரடைய பதிவுகளில், இங்கிலாந்து திரும்பிய பிறகு ஐரோப்பிய ஒன்றியம் சரியும் எனவும் யூரோ பழைய ஐரோப்பிய ஒன்றிய நாணயமாக பயன்படுத்தப்படாமல் போகும்.
அமெரிக்கா உள்நாட்டுப் போர்
போலந்தும் ஹங்கேரியும் முன்பு இருந்த உக்ரைனின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமிக்கும். அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும். அதன் விளைவாக டெக்சாஸ் சுதந்திர மாநிலமாக மாறியது.
டெக்சாஸ் மற்றும் மெக்சிகோ ஒரு கூட்டணி அரசை உருவாக்கும். பல மாகாணங்களில் எலான் மஸ்க் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார், இது புதிய உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு இது நடக்கும்.” என தெரிவித்தள்ளார்.
மெட்வெதேவின் சில கணிப்புகளையும் விமர்சித்தாலும், "எபிக் த்ரெட்!!" என்று மீண்டும் டுவீட் செய்வதன் மூலம் அவர் அமெரிக்க அதிபராக வருவார் என்ற கணிப்புக்கு எலான் மஸ்க் பதிலளித்தார்.
அமைதி ஒப்பந்தத்தில் உக்ரைன் பிரதேசத்தை ரஷ்யாவிற்கு வழங்க முன்மொழிந்ததற்காக மஸ்க்கை கடந்த காலத்தில் மெட்வெடேவ் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
On the New Year’s Eve, everybody’s into making predictions
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) December 26, 2022
Many come up with futuristic hypotheses, as if competing to single out the wildest, and even the most absurd ones.
Here’s our humble contribution.
What can happen in 2023:
Epic thread!!
— Elon Musk (@elonmusk) December 26, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
