2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் கடுமையான காலநிலை நிலவுகின்ற போதிலும் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இயற்கை அனர்த்தங்களினால் பரீட்சைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக பல தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகளை இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுத்து வருகிறது.
தொலைபேசி இலக்கங்கள்
இந்த நிலையில், இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில் பாதிக்கப்படுபவர்கள், '117' என்ற இலக்கம் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடர்பு கொள்ள முடியும்.
A Guidelines for #ExaminationsEmergencies
— DMC-Sri Lanka (@dmc_lk) November 21, 2024
If the examination is disrupted due to any disaster, contact #DMC on 117 or 1911 Emergency Coordinating Office @Department of @Examinations from 24th November to 20th December 2024.
More info#call117#dmcsrilanka pic.twitter.com/kcb6akO1tn
மேலும், 1911 என்ற இலக்கத்தின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தையும் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரையான உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |