வரலாற்றில் மிகவும் சவாலான வரவு - செலவுத் திட்டம் : பொருளாதார நிபுணர்கள்
வரலாற்றில் மிகவும் சவாலான வரவு - செலவுத் திட்டமாக இந்த வரவு - செலவுத் திட்டம் அமையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், வழமையான வரவு-செலவுத் திட்டத்திற்கு மாறாக ஆக்கபூர்வமான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்றவகையில் நாளைய தினம்(13) நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க செலவினங்கள் உட்பட வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பிக்க உள்ளார்.
உத்தேச செலவு
2024ஆம் ஆண்டுக்கான அரசாங்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 3,860 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2023ஆம் ஆண்டு அரசாங்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி செலவினம் 3,657 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேச செலவு 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது எனலாம்.