பாதீட்டீன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் : இரண்டாவது நாள் ஆரம்பம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகின்றது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் தொடர்பில் இன்று (28) குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 103, 222 தொடக்கம் 224 வரை, 304, 320 மற்றும் 325 ஆகிய தலைப்புக்களின் கீழ் இடம்பெறவுள்ளது.
மாலை 6.00 முதல் 6.30 வரை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு 189, 225 மற்றும் 226 ஆகிய தலைப்புக்களின் கீழ் ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (27) ஆரம்பமான இந்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
