உறுதியளித்த கோட்டாபய! கிடைக்கப்போகும் நன்மைகள்! ரணில் பகிரங்கம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Prime minister 21st Amendment Sri Lankan political crisis
By Kanna Jun 13, 2022 01:55 PM GMT
Report

21 வது அரசியல் சீரமைப்பு சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்ததாகவும் 21 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அது அவருக்கே நன்மை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுடனான நேர்காணலின் போதே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த ரணில்,

உறுதியளித்த கோட்டாபய! கிடைக்கப்போகும் நன்மைகள்! ரணில் பகிரங்கம் | 21St Amendment Political Crisis In Sri Lanka

21வது அரசியலமைப்பு திருத்த வரைவை, கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்காமைக்கு, வரைவின் தயாரிப்பு தாமதமானமையே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

21வது அரசியலமைப்பு திருத்த வரைவை தயாரித்து முடிப்பதற்கு பிற்பகல் 3 மணியான நிலையில், மாலை 4 மணி அமைச்சரவைக் கூட்டத்துக்கு அதனை சமர்ப்பிக்கமுடியவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 21 வது திருத்த யோசனைக்கு பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, அரச தலைவரும் ஆதரவளிக்கும் உறுதியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நெருக்கடி தொடர்பில் ரணில்

உறுதியளித்த கோட்டாபய! கிடைக்கப்போகும் நன்மைகள்! ரணில் பகிரங்கம் | 21St Amendment Political Crisis In Sri Lanka

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப 18 மாதங்களாவது செல்லும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தமது தற்போதைய அரசாங்கம் மற்றும் முன்னைய அரசாங்கங்கள் அனைத்தும் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பொதுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் 

உறுதியளித்த கோட்டாபய! கிடைக்கப்போகும் நன்மைகள்! ரணில் பகிரங்கம் | 21St Amendment Political Crisis In Sri Lanka

இதேவேளை அரசியல் நெருக்கடி தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் கோட்டாபய பதவி விலகவேண்டும் என்று கோரப்படுகிறது. சட்டத்தரணிகள் சங்கம் அரச தலைவர் முறை ஒழிக்கப்படவேண்டும் என்று கோருகிறது. மற்றும் ஒரு தரப்பு அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று கோருகிறது.

இந்தநிலையில் இந்த தரப்புக்கள், தமக்குள் கலந்துரையாடி ஒரு பொதுக்கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவு தொடர்பில் ரணில் 

உறுதியளித்த கோட்டாபய! கிடைக்கப்போகும் நன்மைகள்! ரணில் பகிரங்கம் | 21St Amendment Political Crisis In Sri Lanka

இலங்கையை சீனா கைவிட்டு விட்டதாக கூறப்படும் கூற்றையும் இலங்கை தொடர்பில் சீனா குறைந்தளவான அக்கறையை கொண்டிருப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூறியிருப்பதையும் அவர் மறுத்துள்ளார்.

சீனா, இலங்கை தொடர்பில் அதிக அக்கறையை காட்டி வருவதாகவும் எனினும் சீனாவிடம் இருந்து பொருளாதார உதவிகள் குறித்து இன்னும் உரிய பதில்கள் கிடைக்கவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016