கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Sri Lanka Police Bandaranaike International Airport Thailand Buddhism
By Sathangani Apr 28, 2026 05:31 AM GMT
Report

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தொகையிலான போதைப் பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு மகாநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இன்று (28) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் 'குஷ்' (Kush) மற்றும் 'ஹேஷ்' (Hash) போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

 தடுத்து வைத்து விசாரணை

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 22 பேரும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | 22 Sri Lankan Monks Arrested With Rs 1 1 Bn Drugs

அதேநேரம், கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபரான மற்றுமொரு பிக்கு மீகஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் வாழும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பில் வாழும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தாய்லாந்து பயணம் 

கைது செய்யப்படும் போது அவர் போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | 22 Sri Lankan Monks Arrested With Rs 1 1 Bn Drugs

இவரே குறித்த பிக்குகளின் தாய்லாந்து பயணத்தை ஒருங்கிணைத்ததோடு, வட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தொடர்புகளைப் பேணியவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம், மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில், பிக்குகளுக்குச் சமூகத்தில் வழங்கப்படும் கௌரவத்தைத் தவறாகப் பயன்படுத்தி, காவி உடை அணிந்து இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் "பிக்குகளாகத் தோற்றமளிக்கும் போலி நபர்கள்" எனச் சாடியுள்ளனர்.

இந்தநிலையில், மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய, அமைச்சு மட்டத்திலான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி