வங்கிகளில் பெருந்தொகை நிதி மோசடி: இரு முக்கிய வங்கி முகாமையாளர்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
நாட்டில் முக்கிய இரு வங்கியின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாஞ்சேனை மற்றும் கஹவத்த ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வங்கி நிதி நிறுவனங்களின் கிளை முகாமையாளர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி