அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கல் ஹசி நியமனம்
Cricket
Australia
Australia Cricket Team
By Sindu
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் ஹசி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக மைக்கல் ஹசி அவுஸ்திரேலிய அணியில் கன்சல்டன்ட் பயிற்சியாளராக (consultant coach) சேருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் 51இற்கும் அதிகமான சராசரியை வைத்திருந்த மைக்கல் ஹசி இனிவரும் இரண்டாண்டுகளுக்கு அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு ஆஷஸ், ஒருநாள் உலகக் கோப்பை என பல முக்கியமான தொடர்களில் அவுஸ்திரேலிய அணி விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி