பாலியல் அத்துமீறல் : சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
முகநூல் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல முறைப்பாடுகள் தொடர்பில், 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கண்டறிந்து கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்லம் என்பவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
தப்பிச்சென்றுள்ள சந்தேக நபர்
சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர், இலக்கம் 478/A1, அலீம் வீதி, சாய்ந்தமருது 16 என்ற முகவரியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், பின்வரும் தொலைபேசி எண்களின் ஊடாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
காவல்துறை விசாரணை
பொறுப்பதிகாரி, சம்மாந்துறை காவல்துறை: 071-8591162 சம்மாந்துறை காவல் நிலையம்: 067-2260222 இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |