அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக மாறுபட்ட நிலைப்பாடு: பின்வாங்கும் நிலையில் NPP எம்.பிக்கள்
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான புதிய சட்டமூலம் (PSD Act / Repression Bill), இலங்கையை ஒரு காவல்துறை அரசாக மாற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போதைய சட்டமூலத்தின் சில பிரிவுகள், இலங்கையில் ஜனநாயகத்தை நசுக்கி, காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டப்படுகிறது.
மேலும், சாதாரண பொது மக்களின் சிவில் உரிமைகளை இது கடுமையாக பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டத்தரணிகளால் தீர்க்கமான வாதங்கள்
இதன்படி இந்த ஆபத்தான சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டத்தரணிகளால் தீர்க்கமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் வைத்தியர் நஜித் இந்திக்க ஆகியோர் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியவர்கள்.
கடந்த காலங்களில் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியான கொள்கைசார் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த லக்மாலி மற்றும் நஜித் இந்திக்க ஆகியோர், நாடாளுமன்றத்தில் இந்த புதிய சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு வரும்போது தங்களது கைகளை உயர்த்தி ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என சில தரப்புக்கள் விவாதித்து வருகின்றன.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் வாக்குகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் விவாதிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அது நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக NPP உறுப்பினர்கள் தங்களின் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்