நுவரெலியாவில் இருந்து தேசிய அணிக்கு - தமிழ்ச் சிறுவன் ருக்சன் சாதனை!
AFC U17 ஆசியக் கிண்ணம் உஸ்பெகிஸ்தான் 2027 தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை தேசிய U17 கால்பந்து அணி இன்று லாவோஸ் நோக்கிப் பயணமானது.
இந்த அணியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன் ருக்சன் இடம்பெற்றுள்ளமை மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
மலையக மண்ணிலிருந்து தேசிய அணி வரை உயர்ந்துள்ள ருக்சனின் இந்த சாதனை, நுவரெலியா மாவட்டத்தின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.
முக்கியமான போட்டித் தொடர்
இலங்கை அணி D பிரிவில் இடம்பெற்றுள்ளது. லாவோஸ் தலைநகர் வியன்டியானில் உள்ள புதிய லாவோஸ் தேசிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தக் குழுவில் இலங்கையுடன் ஈரான், ஜோர்தான், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் லாவோஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழுவில் முதலிடம் பெறும் அணி மாத்திரமே அடுத்த ஆண்டு மே மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் இலங்கை அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
போட்டி அட்டவணையானது, நவம்பர் 08 - இலங்கை எதிர் பாகிஸ்தான், நவம்பர் 14 - ஈரான் எதிர் இலங்கை, நவம்பர் 17 - ஜோர்தான் எதிர் இலங்கை, நவம்பர் 20 - லாவோஸ் எதிர் இலங்கை இவ்வாறு அமைந்துள்ளது.
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்
எதிர்பார்ப்பு
இதுவரை இலங்கை அணி AFC U17 இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை. இம்முறை முதல் தடவையாகத் தகுதி பெறும் இலக்குடன் களமிறங்கும் இலங்கை அணியில் ருக்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டுள்ளது.

மலையகத்திலிருந்து தேசிய அணிக்குத் தெரிவாகியுள்ள ருக்சனுக்கும் இலங்கை அணிக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |