ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: அமெரிக்க செனட்டர் பெர்னி வலியுறுத்தல்
ஈரான் மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதுடன், இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதியுதவியையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையினர் இந்த இரண்டு விடயங்களையும் தமது முதன்மையான அரசியல் முன்னுரிமைகளாகக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட காணொளி உரையில் கருத்துத் தெரிவித்த சாண்டர்ஸ், “ஈரானில் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் செலவாகக்கூடிய சட்டவிரோதமானதும், அரசியலமைப்புக்கு முரணானதுமான போருக்குள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை இழுத்துச் சென்றுள்ளார்.
பேரழிவை ஏற்படுத்தக்கூடிய போர்
இந்தப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய போரை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இஸ்ரேலில் உள்ள இனப்படுகொலை அரசாங்கத்திற்கான அனைத்து நிதியுதவிகளையும் ஜனநாயகக் கட்சியினர் நிறுத்த வேண்டும்.
மேலும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை கணிசமாகக் குறைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி....! சட்டமா அதிபருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |