ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி....! சட்டமா அதிபருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்வதற்கும், சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கும் கூடுதல் அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (05.11.2026)பிறப்பிக்கபட்டுள்ளது.
ஷிரான் பாஸிக்கின் தடுப்புக் காவலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்
இதன்போது, ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்வதற்கும், சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கும் தற்போதைய நிலையை விட அதிக வாய்ப்புகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரான் பாஸிக் தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் காவல்துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |