தனிநாடு - கூட்டாட்சிக் கோரிக்கை பயங்கரவாதமல்ல என்கிறார் அமைச்சர் ஹர்ஷன நானயக்கார - ஈழத்தமிழ் மீது விரிக்கப்படும் வலையா...

By Independent Writer Oct 23, 2026 11:39 AM GMT
Report
Courtesy: பா.பிரியங்கன்

தனி நாடு அல்லது கூட்டாட்சி கோருவது அரசியல் கருத்து மட்டுமே, அதைப் பயங்கரவாதமாகக் கருத முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் தகவல்களைப் பகிர்வது புதிய சட்டத்தில் எவ்வாறு கையாளப்படும் என்ற கேள்விக்கே இந்தப் பதில் வந்தது. '

X' என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாகித் தனிநாடு கேட்டால் அது அவர்களின் அரசியல் கருத்து என்று எடுத்துக்காட்டுடன் விளக்கிய அவர், விடுதலைப் புலிகள் தொடர்பான விதிமுறைகள் மட்டும் வேறுபடும் என்றும் குறிப்பிட்டார்.

ஈழ வரலாற்றில் உயிர்காக்கும் மருத்துவமனையே படுகொலைக்களமான நினைவுகள்…

ஈழ வரலாற்றில் உயிர்காக்கும் மருத்துவமனையே படுகொலைக்களமான நினைவுகள்…

ஊடகவியலாளர்களும் உரிமை அமைப்புகளும் 

இந்த விளக்கம் வந்திருப்பது, 1979ஆம் ஆண்டுன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கும் புதிய சட்டமூலம் ஒக்டோபர் 6 ம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சூழலில்.

இது இப்போதுவரை வெறும் சட்டமூலமே, நிறைவேறிய சட்டம் கிடையாது. ஆனால் அமைச்சர் தரப்பு, இது குறிப்பிட்ட இன, மத குழுக்களை இலக்கு வைக்காது என்று கூறுகிறது.

ஆனால் ஊடகவியலாளர்களும் உரிமை அமைப்புகளும் தமிழ்க் கட்சிகளும் எதிர்க்கின்றன, 240க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் மாற்றுச் சட்டமே தேவையில்லை என்கின்றன.

இங்கே ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது. தொலைக்காட்சியில் ஓர் அமைச்சர் சொல்வது நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது. சட்டமூலத்தின் பிரிவு 3(4), ஆர்ப்பாட்டமோ கருத்து வெளிப்பாடோ மட்டுமே பயங்கரவாதத்தை ஊகிக்கப் போதுமான அடிப்படை அல்ல என்று கூறுகிறது.

ஆனால் அப்படிப்பட்ட செயல்களைப் பயங்கரவாதமாக வழக்குத் தொடர்வதை அது தடுக்காது என்பது விமர்சகர்களின் வாதம். "மட்டுமே போதாது" என்பதற்கும் "ஒருபோதும் பயங்கரவாதமல்ல" என்பதற்கும் இடையிலான தூரத்தில்தான் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் அச்சம் அடங்கியுள்ளது.

நிமலராஜனின் குரலைக் கொன்றவர்கள் யார்.. நீதி மறுக்கப்படும் ஊடகச் சுதந்திரம்…

நிமலராஜனின் குரலைக் கொன்றவர்கள் யார்.. நீதி மறுக்கப்படும் ஊடகச் சுதந்திரம்…

விடுதலைப் புலிகள் தொடர்பான விலக்கு

விடுதலைப் புலிகள் தொடர்பான விலக்கும் தெளிவற்றதாகவே உள்ளது. விடுதலைப் புலிகள், தமிழ் புனர்வாழ்வுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மீதான தடைகள் புதிய சட்டத்திலும் தொடரும்.

அந்த அமைப்பு தொடர்பாகப் பொருந்தும் "விதிமுறைகள்" என்ன என்பது அமைச்சரின் கூற்றில் தெளிவாக இல்லை. தனிநாட்டுக் கருத்தைச் சொல்வது எந்தக் கட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கான ஆதரவாக மாறும் என்பதே தமிழ் மக்கள் அறிய விரும்புவது. அனுபவமும் இந்த எச்சரிக்கைக்குக் காரணம்.

1982இல் நிரந்தரமாக்கப்பட்ட PTA, பிடியாணை இன்றிக் கைது செய்யவும் குற்றச்சாட்டின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களையே அது இலக்கு வைத்தது.

அதன்பின் அந்தச் சட்டத்தின் நிழலில் வாழ்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல. அமைதியான வழியில் அரசியல் பேசிய தமிழர்களும் அதன் பாதிப்பிலிருந்து தப்பவில்லை.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தமும் இருக்கிறது. தமிழீழக் கோரிக்கைக்குப் பதிலாக வந்த அந்தத் திருத்தம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சிக்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது.

தனிநாட்டை ஆதரிப்பதும் முன்னெடுப்பதும் அதன்படி ஏற்கெனவே தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதச் சட்டமூலத்தில் மட்டும் அது குற்றமல்ல என்று சொல்வதன் நடைமுறைப் பொருள் என்ன?

அதேபோலதான் வாக்குறுதிகளின் வரலாறும் கவனிக்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுச் சட்டம் எதுவும் குறிப்பிடாமல் PTA-ஐ முற்றாக நீக்குவதாக உறுதியளித்தது இப்போது அரசு புதிய பயங்கரவாதச் சட்டமூலத்தையே கொண்டுவந்துள்ளது.

விளையாட்டுப் போட்டிக்கும் குழந்தையின் விநோத வேடத்திற்கும் விசாரணை…

விளையாட்டுப் போட்டிக்கும் குழந்தையின் விநோத வேடத்திற்கும் விசாரணை…

சர்வதேச அடிப்படை

அத்துடன், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியைப் பாதுகாப்பு அமைச்சர் தீர்மானிப்பார் என்பதும், அதற்கு முன் நடந்த குற்றங்கள் பழைய சட்டத்தின் கீழேயே வழக்குத் தொடரப்படும் என்பதும் சட்டமூலத்தின் இடைக்கால ஏற்பாடுகளில் உள்ளன.

கோட்பாட்டளவில் அமைச்சரின் கூற்றுக்கு ஆதரவான சர்வதேச அடிப்படை உண்டு. இலங்கை அங்கம் வகிக்கும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சுயநிர்ணய உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கிறது.

வன்முறையற்ற அரசியல் கோரிக்கை குற்றமல்ல என்பதே அதன் பொருள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையும் அரசாங்கத்தின் மீதான அழுத்தமாக இருப்பதால்தான் இத்தகைய உறுதிமொழிகள் வருகின்றன என்று சிலர் கூறுகிறார்கள்

ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவை அமைச்சரின் உறுதிமொழி அல்ல. சட்ட வாசகத்தில் எழுதப்பட்ட பாதுகாப்பே தேவையாகும் . அந்த வாசகம் திருத்தப்படாமல் நிறைவேறினால், இன்று தொலைக்காட்சியில் சொல்லப்பட்ட வார்த்தைகளை நாளை யார் நீதிமன்றத்தில் நினைவூட்டுவார்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 23 October, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  


ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024