நிமலராஜனின் குரலைக் கொன்றவர்கள் யார்.. நீதி மறுக்கப்படும் ஊடகச் சுதந்திரம்…

Sri Lankan Tamils Journalists In Sri Lanka
By Theepachelvan Oct 19, 2026 11:39 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

இப்போது போல டிஜிட்டல் ஊடக இல்லாத அன்றைய காலத்தில் பத்திரிகை மற்றும் வானொலியில் யாழ்ப்பாணத்தின் போர்ச் செய்திகளை கொண்டு சேர்ந்த ஒரு ஊடகவியலாளரின் வீட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் நுழைந்தன.

2000 ஒக்டோபர் 19ஆம் நாளன்று, ஏதோவொரு செய்தியை எழுதிக்கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது குடும்பத்தினரும் தாக்குதலில் காயமடைந்தனர். யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள், ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், இராணுவக் காவலரண்களுக்கு மிக அருகில்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்தது.

ஒரு தமிழ்பொதுமகனின் உயிர் காவுகொள்ளப்பட்டதுடன் போரால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்தின் உண்மைகளைப் வெளி உலகிற்கு கொண்டு சேர்த்த ஊடகக் குரலொன்றும் அடக்கப்பட்டது.

நீதி கிடைக்காத படுகொலை

நிமலராஜன் பிபிசியின் தமிழ், சிங்களச் சேவைகளுக்கும், வீரகேசரி, ராவய உள்ளிட்ட ஊடகங்களுக்கும் செய்திகளை வழங்கி வந்தார். யாழ்ப்பாணத்தின் அரசியல் நிலவரம், போர் ஏற்படுத்திய அழிவுகள், தேர்தல் வன்முறைகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தார்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இடம்பெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான அவரது செய்தியறிக்கைகள் படுகொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிமலராஜன் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையில்தான் இயங்கி வந்தார் என்றும் ஊடகச் சுதந்திர அமைப்புகள் பதிவு செய்தன.

நிமலராஜனின் படுகொலை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால் நீதியோ நிலைநாட்டப்படவில்லை. 2021ஆம் ஆண்டு அவருடைய கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதுடன், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாதிருப்பது, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு தண்டனையின்றித் தொடர்கின்றன என்பதற்கான பெருத்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

2025ஆம் ஆண்டு REDRESS அமைப்பும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டமும் வெளியிட்ட நிமலராஜன் படுகொலை தொடர்பான ஆய்வு, இந்த வழக்கில் விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு தோல்வியடைந்தன என்பதை ஆவணப்படுத்தியது.

2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறைந்தது 44 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இது தனித்தனி குற்றங்களின் தொகுப்பாக அல்லாமல், உண்மையைப் பதிவு செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய நீண்டகால அரசியல் மற்றும் நீதித்துறைமீதான பெரும் குற்றசாட்டு என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.

அச்சுறுத்தல்களுக்குள் வாழும் ஊடகச் சுதந்திரம்

வடக்கு–கிழக்கில் ஊடகவியலாளராக இருப்பது செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதுடன் மாத்திரம் நிற்பதில்லை.

யாருடைய துயரத்தைப் பதிவு செய்கிறோம், எந்த இடத்துக்குச் செல்கிறோம், எதைப் பகிரங்கப்படுத்துகிறோம் என்பன சில நேரங்களில் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய சிக்கல்களாக மாறுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், நிலங்களை இழந்த மக்கள், போரில் பாதிக்கப்பட்டவர்கள், இராணுவமயமாக்கலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ஆகியோரின் கதைகளைப் பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களையும் கண்காணிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் நீடிப்பதே தொடர்கதையாகும்.

ஊடகச் சுதந்திரம் என்பது ஊடக நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கான அனுமதி என்றுதான் இலங்கையில் கருதப்படுகிறதுபோலும்.

உண்மையில் மக்கள் தமது அனுபவங்களை அச்சமின்றிப் பகிர்ந்துகொள்வதற்கும், அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கும், அரசின் செயற்பாடுகளை ஆராய்வதற்கும், மறைக்கப்படும் உண்மைகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதற்குமான உரிமைதான் ஊடக சுதந்திரம்.

அது அரசுக்கு எதிரானதாகவும் ஆட்சிக்கு எதிரானதாகவும் இருக்கலாம். இந்த உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாகும்போது பாதிக்கப்படுவது ஊடகவியலாளர் என்று மாத்திரம் நினைத்துவிடக்கூடாது. தகவலறியும் உரிமையைக் கொண்ட ஒட்டுமொத்த சமூகமும்தான் இதில் பாதிக்கப்படுகிறது.

ஊடக சுதந்திரத்திற்கான நீதி

நிமலராஜனின் கொலை தொடர்பான நீதி மறுப்பு என்பது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாவிட்டால் உருவாகும் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு கொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போகும்போது, அடுத்த ஊடகவியலாளருக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு அது மறைமுகமான இடமளிக்கிறது.

உண்மையை எழுதுவதற்கான விலை உயிர் என்ற அச்சம் உருவானால், பல செய்திகள் எழுதப்படாமலேயே புதைக்கப்படும் என்பதை நிமலராஜனுக்கு முன்னும் பின்னுமான ஊடகச் சூழல் உணர்த்துகிறது.

 ஆண்டுதோறும் சில ஊடகச் செய்திகளுடனும் சமூக வலைத்தளப் பதிவுகளுடமனும் நிமலராஜனின் நினைவுநாள் கடந்து செல்கிறது.

அவரது படுகொலைக்கான நீதியை மீண்டும் கோருவதற்கும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் சுயாதீனமாக விசாரித்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதற்குமான நாளாக நாம் இதனை மாற்ற வேண்டும்.

அதன் வாயிலாக அவரது குடும்பத்துக்கு உண்மையும் நீதியும் கிடைக்க வேண்டும்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் வழக்குகள் மறக்கப்படாமல் மீளாய்வு செய்யப்பட வேண்டும். அச்சுறுத்தல்களின்றி செய்திகளைச் சேகரிக்கவும் வெளியிடவும் ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட எங்கள் ஊடக நண்பர்களுக்கு நீதி வேண்டும்: ஐபிசி தமிழின் பகிரங்க கோரிக்கை

படுகொலை செய்யப்பட்ட எங்கள் ஊடக நண்பர்களுக்கு நீதி வேண்டும்: ஐபிசி தமிழின் பகிரங்க கோரிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 October, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026