காதல் உறவால் விபரீதம்: புஸ்ஸல்லாவையில் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை!
புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொரகல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன், அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆணும் உயிரிழந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (04.11.2026) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புஸ்ஸல்லாவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொரகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும், குருநாகல் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
காவல்துறையனரின் விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்த பின்னர், உயிரிழந்த ஆணுடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று பெண்ணின் வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |