நீண்ட நாள் விரோதம்:முற்றிய வாக்குவாதம்:மீகொடயில் ஒருவர் கொலை
கொழும்பு, மீகோட, ஓவிட்டிகம பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு நபர்களுக்கு இடையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து உயிரிழந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறை அறிக்கை அளித்துள்ளது.
நீண்ட நாள் விரோதம்
உயிரிழந்தவர் சிறிய கடையொன்றினை நடத்தி வந்த நிலையில், அவருடன் நீண்ட காலமாக விரோதத்துடன் இருந்த நபர் ஒருவர் பல தடவைகள் அவரது கடைக்கு முன்னால் சென்று வாய்மொழியாக அவரைத் திட்டியுள்ளார். இதன்போது தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மீகோட, ஓவிட்டிகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சந்தேக நபரைப் கைது செய்வதற்கும் இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |