கண்டியில் பெண் வெட்டிக் கொலை: வீட்டின் பின்புறத்தில் மற்றொரு சடலம் மீட்பு!
கண்டியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த பெண்ணின் வீட்டின் பின்புறத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புஸ்சல்லாவை (Pussellawa) காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசர அழைப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண் 38 வயதுடைய திலானி ஷாலிகா எனப் காவல்துறையினரால் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் முன்னர் திருமணமானவர் என்பதும் தனது முதலாவது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நபரே அப் பெண்ணின் வீட்டின் பின்புறத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இக் கொலை மற்றும் அந்நபர் உயிரிழந்தமை குறித்து துல்லியமான காரணங்கள் அல்லது பின்னணிகள் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை.
இருவரது மரணங்கள் தொடர்பிலும் புஸ்சல்லாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |