ராஜபக்சர்களின் உளவாளி என்ற எதிர்வினை: தமிழர்கள் கற்க வேண்டிய இஸ்ரேலின் வியூகங்கள் - நிராஜ் டேவிட் வெளிப்படை
உலக அரங்கில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நாடற்றவர்களாகவும் அடிமைகளாகவும் அலைந்து திரிந்த யூத இனம், தங்களின் தேசக் கனவை எவ்வாறு தலைமுறைகளைக் கடத்திக் கொண்டு சென்றார்கள் என்ற வரலாற்று நுணுக்கங்களை ஈழத் தமிழர்கள் ஆழமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்
ஐபிசி தமிழ் (IBC Tamil) ஊடகத்தின் ‘சக்கரவியூகம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நேர்காணலில் இஸ்ரேலின் வெற்றி ரகசியம், பலஸ்தீனத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் தமிழர்கள் செய்ய வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து அவர் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தான் இஸ்ரேல் குறித்து நேர்மறையான கருத்துக்களை முன்வைப்பதால், தன்னை மொசாட், ரோ அல்லது மகிந்த ராஜபக்சவின் உளவாளி எனப் பலர் விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட நிராஜ் டேவிட், தான் எதற்கும் அஞ்சாமல் தமிழ் மக்களின் நன்மைகளை மட்டுமே கருதிச் செயல்படும் தமிழ் மக்களின் உளவாளி என திட்டவட்டமாகத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |