காவல் பரிசோதகர் வருணி போகஹவத்த உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கொட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான காவல் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விசாரணைகளை நிறைவு செய்து அது குறித்த விடயங்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
உறுதிபடுத்த தவறியமை
கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு மற்றும் அதன் குத்தகை தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதற்குப் பணம் கிடைத்த விபரங்களை உறுதிப்படுத்தத் தவறியதையடுத்தே, வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வசமிருந்த அதிநவீன கார் ஒன்றும் கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தனது பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டிருந்தது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவரால் குறித்த காரின் குத்தகைத் தவணைகள் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தமையே இந்த விசாரணைகளுக்குக் காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்