காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்பனை செய்த விவகாரம்: காவல்துறையினர் மூவருக்கு பணி இடைநிறுத்தம்
கினிகத்தேனை காவல்துறையினருக்கு பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றியின் சடலத்தை, கால்நடை வைத்திய அலுவலகத்தில் ஒப்படைத்த பின்னர், இறைச்சியாக்கி ஹோட்டல் ஒன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம் செய்யபட்டுள்ளனர்.
அதன்படி இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி ஆகிய மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
ஹட்டன் உதவி காவல்துறை அத்தியட்சகர்
காட்டுப்பன்றி ஒன்றைக் கொன்று, அதனை முச்சக்கரவண்டியில் கொண்டு செல்வதாக கினிகத்தேனை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று சந்தேகநபர்களுடன் குறித்த காட்டுப்பன்றியின் சடலமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மறுநாள் கால்நடை வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த சடலம் கினிகத்தேனை கால்நடை வைத்திய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, குறித்த சடலத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து அழிக்க வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவ்வாறு செய்யாமல், கினிகத்தேனை - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்குக் குறித்த சடலத்தைக் கொண்டு சென்று இறைச்சியாக்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், அந்த இறைச்சியை அப்பகுதியிலுள்ள மற்றுமொரு ஹோட்டலுக்கு குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மூவரும் விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறை உத்தியோகத்தர்கள் மூவரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஒழுக்கமற்ற செயற்பாடு தொடர்பில் அவர்களைப் பணி இடைநிறுத்தம் செய்ய ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்