அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய நிலை
இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (06) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை வர்த்தக வங்கிகளில் 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
இதன்படி, செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.05 ரூபாயாகவும், விற்பனை விலை 337.30 ரூபாயாகவும் மாற்றமின்றித் தொடர்கிறது.
வர்த்தக வங்கி
என்.டி.பி வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.80 ரூபாயிலிருந்து 328 ரூபாயாகவும், விற்பனை விலை 336.80 ரூபாயிலிருந்து 337 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.30 ரூபாயிலிருந்து 328.35 ரூபாயாகவும், விற்பனை விலை 336.44 ரூபாயிலிருந்து 336.49 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.58 ரூபாயிலிருந்து 326.38 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயிலிருந்து 336.30 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இதேவேளை, சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |