Gas சிலிண்டர்களை மறைத்து வைத்தால் தண்டணை - அதிரடி சோதனை
நுகர்வோருக்குத் தேவையானவாறு எரிவாயு விநியோகிக்கப்படாமல், எரிவாயுக் கையிருப்புகளைப் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்காக நாடு தழுவிய ரீதியிலான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
எரிவாயுக் கையிருப்புகளைப் பதுக்கி வைத்த 100 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
சிலிண்டர்கள் இல்லை
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் கண்டி பகுதியில் விற்பனைக்காக எரிவாயு சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருந்தும், தன்னிடம் சிலிண்டர்கள் இல்லை எனக் கூறி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட தலா 12.5 கிலோகிராம் எடையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி மாவட்ட அலுவலக விசாரணை அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்