நாடாளுமன்றம் வருகிறது 22 ஆவது திருத்த சட்டமூலம் : எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடு
இருபத்திரண்டாவது அரசியலமைப்பு (திருத்த) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையை சபாநாயகர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்தன.
இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பெறப்பட்ட சுமார் 70 மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது.
ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
இதற்கிடையில், இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறும் இரண்டு நாட்களிலும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதர பயணங்களைத் தவிர்த்து கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

மேலும், அந்த நாட்களில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தை 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்த நாடாளுமன்ற விவகாரக் குழு, 10 ஆம் திகதி, வியாழக்கிழமை அன்று முடிவு செய்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 9 மணி நேரம் முன்