ஒரே இரவில் கலைக்கப்படும் நாடாளுமன்றம்: தயார் நிலையில் வர்த்தமானி
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு வர்த்தமானி தயார் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Waleboda) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வது சிறிலங்கா அதிபருக்கு சவாலாக உள்ளதால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை போக்கும் வகையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையால் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல்
அத்துடன், தற்போதுள்ள அரசியலை வேறு திசையில் மாற்றும் நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், 22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |