வழிபாட்டு தலங்களுக்கும் 25,000 ரூபாய் அரசாங்க நிவாரணம்!
Sri Lanka
Weather
Floods In Sri Lanka
Rain
By Kanooshiya
டித்வா பேரிடர் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இவ்வாறு சேதமடைந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
இன்று (11.12.2025) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்