யாழில் சமூக வலைத்தளங்கள் மூலம் பாரிய பண மோசடி
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் இருவரிடமிருந்து சுாமார் 26 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பில் இரு முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களால் நேற்று (27) பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்கள்
இந்நிலையில், இணையம் மூலம் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைக்காட்டியே குறித்த நபர்களிடமிருந்து இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்களிடமிருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாகவே மோசடியாளர்கள் தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர்.
வேண்டுகோள்
இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து சுமார் 20 லட்சம் ரூபாவையும், மற்றையவர் 6 இலட்சம் ரூபாவையும் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், சமூகவலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாணம் பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |