நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (03-02-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,480,124 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 52,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 417,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 47,860 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 382,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 45,690 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலக சந்தை
21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 365,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, உள்நாட்டின் செட்டியார் தெரு நிலவரப்பட்டி 24kt - 380,000, 22kt - 348,500 18kt - 285,000 என பதிவாகியுள்ளது.

அத்தோடு, உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாகவும் அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,737 அமெரிக்க டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 6 மணி நேரம் முன்