விசாரணைக்கு சிரிலிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத ஷிரந்தி
ஷிரந்தி ராஜபக்சவின் அடையாள அட்டை தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஷிரந்தி ராஜபக்ச
“சயாநாயகரே இன்று ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

நாம் சாதாரணமாக காவல்துறைக்கு சென்றாலே நமது ஆள் அடையாள அட்டையை கொண்டு செல்வோம்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் சுசந்த தொடாவத்த கதைத்திருந்தார்.
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. FCIDக்கு செல்லும்போது அடையாள அட்டையை எடுத்து செல்லவேண்டுமா என்ற கேள்வி உள்ளது.
சட்டத்தரணி என்ன ரீதியில் அவரிடம் இது தொடர்பில் சில விளக்கங்களை கேட்க விரும்புகின்றேன்” என்றார்.
தொடவத்த கருத்து
இதன்போது கருத்து தெரிவித்த ஆளும்கட்சி உறுப்பினர் தொடவத்த,

சபாநாயகரே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ அல்லது, நிதி மோசடி விசாரணை பிரிவுக்கோ செல்லும்போது தனது உண்மையான அடையாள அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாகும்.
நமது அடையாள அட்டையை வழங்கியே அதற்குள் செல்வதற்கான அனுமதியை பெற வேண்டும்.
இங்கு சிரிலிய தொடர்பான முறைப்பாடு விசாரணையே இடம்பெறுகிறது.
ஆக சிரிலிய தொடர்பான ஆவணங்களுடன் சிரிலியவுக்கு பயன்படுத்திய அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க கோரியிருந்தால் சில வேலைகளில் ஷிரந்தி ராஜபக்ச அந்த அடையாள அட்டையை சமர்ப்பித்திருக்க கூடும்” என கிண்டலாக பதில் வழங்கியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்