சிறிலங்காவை உலுக்கிய 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Pakirathan
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதி வரை 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐந்து காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும், மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்