சிறிலங்கா காவல்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் : வெளியான அறிவிப்பு
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Ananda Wijepala
By Sumithiran
காவல்துறையில் தற்போது சுமார் 28,000 வெற்றிடங்கள் உள்ளன, அதன்படி, 5,000 பேரை பணியமர்த்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வாய்மொழி பதிலை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திகா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இன்று (08) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
விரைவில் பதவி உயர்வு
காவல்துறை வெற்றிடங்களை கருத்தில்கொண்டு தற்போது ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அடுத்த 03 மாதங்களுக்குள் கீழ் தரத்தில் 5,000 பதவி உயர்வுகளையும், தேர்வு தரத்தில் 1,500 பதவி உயர்வுகளையும் வழங்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
