யாழில் காவல்துறையினரின் 119க்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழப்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani May 18, 2025 08:54 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினரின் அவசர அழைப்பு பிரிவின் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியை சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காவல்துறையினரின் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் நேற்று (18) இரவு அழைப்பினை மேற்கொண்டு, குடும்ப தகராறு என கூறி அவசரமாக காவல்துறையினரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நினைவேந்தலின் போது குதித்த சிங்கள அமைப்பினால் குழப்பம்!!

கொழும்பில் நினைவேந்தலின் போது குதித்த சிங்கள அமைப்பினால் குழப்பம்!!

போதனா வைத்தியசாலையில் அனுமதி

அதனை அடுத்து, யாழ்ப்பாண காவல் நிலையத்தில் நடமாடும் தொலைபேசி சேவையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழு, தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர்.

யாழில் காவல்துறையினரின் 119க்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழப்பு | 29 Years Old Young Boy Died Suddenly In Jaffna

அங்கு காவல்துறையினர் சென்ற வேளை காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாக நம்பப்படும் இளைஞன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

இதனை அடுத்து, நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞன் அழைத்து செல்லப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்துக்கு பறந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்

சுவிட்சர்லாந்துக்கு பறந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்

காவல்துறையினர் விசாரணை

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் காவல்துறையினரின் 119க்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழப்பு | 29 Years Old Young Boy Died Suddenly In Jaffna

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்த மக்கள் : பல கிலோமீற்றர்களுக்கு வாகன நெரிசல்

முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்த மக்கள் : பல கிலோமீற்றர்களுக்கு வாகன நெரிசல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010