கொழும்பில் நினைவேந்தலின் போது குதித்த சிங்கள அமைப்பினால் குழப்பம்!!
கொழும்பு - வெள்ளவத்தை கடற்கரையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் பதினாறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு சிங்கள அமைப்பொன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது, சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, அங்கு வந்த சிங்கள அமைப்பொன்றின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், அவ்விடத்திற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
காவல்துறை பாதுகாப்பு
குறித்த நபர்கள், நந்திக்கடலில் புலி உறுப்பினர்கள் மாத்திரமே சிறிலங்கா இராணுவத்தினால் கொல்லப்பட்டதாகவும் சிவில் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றும் கூச்சலிட்டனர்.
அத்துடன், யாருக்காக இந்த நினைவேந்தல் இடம்பெறுகின்றது என்பதை, அங்கு நினைவேந்தலை ஒழுங்கு படுத்தியவர் ஊடகத்திற்கு முன்வந்து பதில் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் காவல்துறையினருடன் முரண்பட்டனர்.
எவ்வாறாயினும், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை பாதுகாப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்ததுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு, நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
