திருகோணமலையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை 4 மணியளவில் திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினர் இணைந்து முள்ளிய வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தினர்.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், இறுதி யுத்தத்தின் போது இனபடுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
தமிழினப் படுகொலையின் பதினாறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் திருகோணமலையில் (Tricomalee) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை தம்பலகாமம் கள்ளிமேட்டு பகுதியில் இன்று (18) காலை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் இளைஞர்கள், காணாமற்போனோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர்.
சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.
மே மாதம் 12 தொடக்கம் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் இன்றைய தினம் (18) விசேடமாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


