ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு என்ன பதில் இருக்கும் என்பதை "நீங்கள் மிக விரைவில் அறிந்துக்கொள்வீர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க தரைப்படைகளை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பைப் பற்றி தான் பயப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் “தரையில் காலணிகளை அணிய வேண்டிய அவசியமில்லை”(தரைப்படைகளை நிலைநிறுத்த) என நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பு
சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டதாக இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி தலைநகரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள நகரின் இராஜதந்திர பகுதியில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், புகை மேகங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தற்போது நடத்தி வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |