யாழ். சாவகச்சேரியில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது
Sri Lanka Police
Jaffna
Drugs
Arrest
By Sindu
யாழ்ப்பாணத்தில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை காவல் விசேட அதிரடி படையினர் சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
ஒருவரிடம் இருந்து 13 கிராம் 710 மில்லிக்கிராமும், மற்றையவரிடமிருந்து 1 கிராம் 300 மில்லிக்கிராமும், மூன்றாவது நபரிடமிருந்து 1 கிராம் 400 மில்லிக்கிராமுமாக 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
அதனை அடுத்து மூவரையும் காவல் விசேட அதிரடி படையினர் கைது செய்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன் மூவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி