கனடாவிலும் கௌரவம் ..! ஈழத் தமிழனின் சாதனை ..!
தாயகத்தில் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்.பொதுநலவாய அமைப்பு நடத்திய போட்டியொன்றில் விருது ஒன்றையும் பெற்றுக்கொண்டவர். தற்போது பொய்யா மொழியாம் திருக்குறளை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் ஈழத்தமிழரான சிற்றம்பலம் அம்பிகாவரன்.
அவர் ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிக்கு தனது சேவையை இவ்வாறு விபரிக்கிறார்.
யாழ்ப்பாணம் என்பது குடும்ப பந்தத்தில் ஊறிப்போய் பிறந்தது.ஒரு பாடத்தை நாம் அப்படியே கற்பித்தல் என்பது அது வங்கியில் பணத்தை வைப்புச் செய்தல் போன்றது.அது ஒரு தகவல் சேமிப்பு போன்றது என்கிறார் இவர்.
இவர் கனடாவில் இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
தற்போது பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை முடித்துவிட்டால் சரி என்ற கற்பித்தலே நடைபெறுகிறது.பின்னர் சேவைக்கான பாராட்டுகள், விழாக்கள் எல்லாம் நடைபெறுகின்றன. இதெல்லாம் ஒரு அர்த்தமற்ற விடயம்.
சேவை என்பது உன்னுடைய வேலை நேரத்தை தவிர மேலதிக நேரத்தில் உன்னுடைய சமுகத்திற்கு என்ன செய்கிறாயோ அதில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறாயோ அதுதான் சேவை என்கிறார் இவர்.
அவரின் அனுபவம் தற்போது 84 வயதாகியும் அவரது துடிப்பான செயற்பாடு தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்...