மற்றுமொரு சீனப் பிரஜைகள் குழு அதிரடியாக கைது
இணையத்தளம் ஊடாக கணினி குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சீனப் (China) பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (24) மாலை காலி (Galle) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொபே வீதி, கிந்தோட்ட பிரதேசத்தில் வைத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 03 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பவம் தொடர்பில் காலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |