இலங்கையில் வாய்ப் புற்றுநோயினால் தினமும் 3 மரணங்கள் பதிவு
இலங்கையில் வாய்ப் புற்றுநோய் பாதிப்பினால் தினசரி 3 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெற்றிலை, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய்ப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
வாய்ப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதய நோய் மற்றும் நியுமோனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
6 நோயாளர்கள் அடையாளம்
மார்ச் மாதம் 20ஆம் திகதி வாய்ப் புற்றுநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாய்ப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக தினசரி 6 நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை உலக சனத்தொகையில் 3.5 பில்லியன் பேர் பல் சொத்தை நிலையை எதிர்நோக்கி வருவதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |