ஹமாஸ் அமைப்புக்கு பேரிழப்பு: ஒரே நாளில் கொல்லப்பட்ட தளபதிகள்!
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையேயான தாக்குதலில் ஹமாஸ் படையின் துணைதளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 19 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக ஹமாஸ் அரசியல் துறை உறுப்பினர் காஜி ஹமாத் தகவல் வழங்கியுள்ளார்.
துணைதளபதிகள்
இந்தநிலையில், தான் ஹமாஸ் படையின் துணைதளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி என்ற மூன்று துணைத் தளபதிகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலிலே துணைதளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.