பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இலங்கைத் தமிழர்களின் மரணம்!
சென்னையில் மூன்று இலங்கை தமிழர்கள் உந்துருளியில் செல்லும் போது, கனரக வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் சென்னை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இடம்பெற்றுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தயாளன், சார்லஸ், ஜோன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
"உயிரிழந்த மூவரும் நேற்று பெத்திக்குப்பத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உந்துருளியில் சென்றுள்ளனர்.
அப்போது உந்துருளியை வேகமாக செலுத்திக் கொண்டு, கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தபடி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு முன் சென்ற கனரக வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், மூவரும் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் கைது
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞர்களின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த இளைஞர்களான தயாளன்(19), சார்லஸ் (21), ஜான் (20) ஆகியோர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கனரக வானக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
