திடீர் மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் மீளிணைப்பு!
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக முழுமையாகச் செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் வெற்றிகரமாக மீண்டும் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 17ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் முற்றாகச் செயலிழந்திருந்தன.
இதனிடையே, குறித்த திடீர் பழுதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உடனடியாக மின் கட்டமைப்பில் இணைக்கப் போவதில்லை எனவும், சில நாட்களுக்குப் பின்னரே இணைக்கப்படும் எனவும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
தேசிய மின் விநியோகக் கட்டமைப்பு
இது போன்ற அவசர நிலைமைகளின் போது பின்பற்றப்படும் வழமையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், தற்போது குறித்த மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் வெற்றிகரமாக மீண்டும் இயக்கப்பட்டு, தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |